கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை கதையின் நாயகியாக அறம், மாயா, டோரா, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வந்த நயன்தாரா அதன்பின்னர் பிகில், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் கதாநாயகனுடன் சேர்ந்து டூயட் பாடும் வழக்கமான கதாபாத்திரத்துக்கு மாறினார்.
தற்போது மீண்டும் தனது பழைய பாணிக்கு திரும்பியுள்ள நயன்தாரா நடித்துள்ள படம்தான் O2 ஆக்சிஜனின் வேதியல் பெயர்தான் O2. கதையும் இந்த ஆக்சிஜனை மையப்படுத்திய உருவாகி உள்ளது. ஜி.எஸ் விக்னேஷ் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் மலைப்பாதையில் விபத்தில் மாட்டிக் கொண்ட ஒரு பேருந்தில் சிக்கித் தவிக்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளது.

அந்த பயணத்தில் அனைவருக்கும் ஆக்சிஜன் தேவைப்பட சுவாச பிரச்சினை காரணமாக எப்போதும் சுவாச கருவியுடன் இருக்கும் நயனதாராவின் மகனிடமிருந்து அதை கைப்பற்ற முயற்சி நடக்கிறது. இந்த சூழ்நிலையை எப்படி நயன்தாரா கையாண்டார் என்பதை வைத்து த்ரில்லிங்காக இந்தப் படம் உருவாகி உள்ளதுடன் விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் கதையை கேட்டதும் இது எந்த படத்தின் ரீமேக் என்பது போன்ற ஒரு சில ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்புகின்றனர். இதைப் பார்த்து கோபமான படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்ஆர் பிரபு, “நம்ம ஊரில் சொந்தமாக இதுபோன்ற ஒரு கதைகளை யோசித்து படமாக எடுத்தால் உடனே எந்த படத்தின் ரீமேக் என்று கேட்கிறீர்களே.. என்ன டிசைன்யா நீங்கள்லாம்” என்பது போன்று காட்டமாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் இது அக்மார்க் ஜிஎஸ் விக்னேஷ் படம்தான் என்பதையும் அழுத்தமாக கூறியுள்ளார் எஸ்ஆர் பிரபு.