சிபிராஜ் நடிப்பில் மாயோன், ரங்கா எனது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் தயாராகி வந்தன. இதில் ரங்கா திரைப்படம் மே 13ஆம் தேதி வெளியாகிறது வினோத் டிஎல் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார்

சமீபத்தில் இந்தப்படத்தின் சினீக் பீக் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர். எதிரிகளிடம் இருந்து தப்பித்து ஆளரவம் இல்லாத வனாந்திர பகுதியில் காரை ஓட்டிக்கொண்டு செல்லும் சிபிராஜும் நிகிலாவும் காட்டு நாய் ஒன்றிடம் சிக்கிக் கொள்வது போலவும் அதனிடமிருந்து தப்பிக்க போராடுவது போலவும் நிகிலா நாயிடம் சிக்கி கொள்வது போலவும் சஸ்பென்ஸ் உடன் முடித்திருந்தார்கள்.

நிச்சயமாக படம் பார்க்கும் ஆவலை தூண்டும் விதமாக தான் இந்த காட்சி இருக்கிறது அந்த வகையில் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கலாம்.