தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை கன்னட திரையுலகம் மட்டுமே வியாபார எல்லையாக ஒரு குறுகிய வட்டத்தில் சுழன்று கொண்டிருந்தது. மற்ற மொழிப்படங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் வெளியாகி வந்த நிலையில், கன்னட படங்கள் அப்படி தமிழகத்தில் வெளியாவது ரொம்பவே அரிதாக இருந்தது. அந்த நிலையை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான கேஜி எஃப் படம் மாற்றியது
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் இந்தியிலும் அந்த படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதற்கு சற்றும் குறையாத வகையில் சமீபத்தில் வெளியான அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கன்னட படங்களுக்கு மிகப்பெரிய வியாபார எல்லையை திறந்துவிட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது அடுத்ததாக கன்னடத்திலிருந்து கிட்டத்தட்ட பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது விக்ராந்த் ரோணா. கிச்சா சுதீப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பண்டாரி என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்துள்ளார்
வரும் ஜூலை 28 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படம் தற்போது வியாபாரரீதியாக ஆச்சரியமான ஒரு சாதனையை செய்துள்ளது.. ஆம்.. இப்படம் சர்வதேச சந்தையில் பெரும் தொகையை பெற்று சாதனை படைத்துள்ளது. வெளிநாட்டு சந்தை விநியோகத்தை ‘One Twenty 8 media’ கைப்பற்றியுள்ளது. ஒரு கன்னடப் படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு பெரிய விலையைப் பெற்றது இதுவே முதல்முறை. என்கிறார்கள்