V4UMEDIA
HomeNewsKollywoodமிருகங்களின் குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களை மையப்படுத்தி உருவாகும் அசோக் செல்வனின் வேழம்

மிருகங்களின் குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்களை மையப்படுத்தி உருவாகும் அசோக் செல்வனின் வேழம்

பெரும்பாலும் சக மனிதர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் குறிப்பிடும்போது நரியை போன்ற தந்திரக்காரன், சிங்கத்தைப் போன்ற பலசாலி, நாயைப் போல நன்றி உள்ளவன் என மிருகங்களின் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு கூறுவது வழக்கம். அப்படி அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் படம் தான் வேழம்

வேழம் என்றால் யானை என்று அர்த்தம்.. கதாநாயகன் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஆக்கிரமிப்பு, பாதுகாப்பு மற்றும் நினைவாற்றல் போன்ற, ஒவ்வொரு உயிரினங்களின் குணாதியங்களை கொண்டுள்ளார்கள்.. முழு திரைப்படமும் இந்த குணாதியங்களை சுற்றியே சுழல்கிறது.

இந்தப் படத்தை சந்தீப் ஷியாம் என்பவர் இயக்கியுள்ளார். அசோக் செல்வன், ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் கிட்டி, சங்கிலி முருகன் பி.எல்.தேனப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் வாங்கி உள்ளது. டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Most Popular

Recent Comments