நடிகர் பாபி சிம்ஹா.. இல்லை இல்லை.. இனிமேல் அவர் வெறும் சிம்ஹா மட்டுமே.. மிகச்சிறந்த நடிகர்தான்.. ஜிகர்தண்டா படத்தில் வில்லனாக பிரமிக்கவைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்று இளம்வயதிலேயே வயதிலேயே சாதனை செய்தவர் தான்.. ஆனால் அடுத்தடுத்து படங்களை தேர்வு செய்வதில் சரியாக கவனம் செலுத்தாததாலோ என்னவோ இவரது படங்கள் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஏமாற்றத்தையே கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது தடை உடை என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் என்.எஸ்.ராகேஷ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் சிம்ஹாவுக்கு ஜோடியாக மிஷா நராங் என்பவர் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகினி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இந்தப் படத்தின் துவக்க விழாவில் அவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிம்ஹாவே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். தானாகவே தன்னை கைதூக்கி விட்டுக்கொள்ள வேண்டும் என்கிற புதிய பாணியில் பாபி சிம்ஹா இறங்கியுள்ளார் என்பது நன்றாகவே தெரிகிறது.