V4UMEDIA
HomeNewsKollywoodஇரவின் நிழலை வெளியிடும் கலைப்புலி தாணு

இரவின் நிழலை வெளியிடும் கலைப்புலி தாணு

பார்த்திபன் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் இரவின் நிழல். பார்த்திபன் என்றாலே புதுமை தான். ஒத்த செருப்பு படத்தில் ஒத்த ஆளாக மொத்தப்படத்தையும் தாங்கி நடித்து விருதுகளை தட்டிச் சென்றவர், தற்போது ஒரே ஷாட்டில் இந்த இரவின் நிழல் படத்தை இயக்கியுள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. நிச்சயமாக இந்திய சினிமாவின் அதிலும் தமிழ் சினிமாவின் பெருமையை உலக அளவில் பேசவைக்கும் படமாக இது உருவாகி உள்ளது என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட ஒரு படம் ரசிகர்களை சரியாக சென்று சேர வேண்டுமானால் அதை வெளியிடும் நிறுவனம் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் அந்த வகையில் இந்த படத்தை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

இதுபற்றி பார்த்திபன் கூறும்போது, “ஓடி ஜெயிக்கும் முன் – நான் புதிய பாதைக்காக ஓடும்போதே விசிலடித்து உற்சாகப்படுத்தியவர் தாணு அவர்கள்! அவர்கள் இன்றும் என் IN-க்கு உற்சவர் ஆவது… அவரது பாஷையில் “இந்த நாள் இனிய நாள்!!!” எனக் கூறியுள்ளார்

Most Popular

Recent Comments