V4UMEDIA
HomeNewsKollywoodபறக்கத் தயாராகும் அமலாபாலின் பறவை

பறக்கத் தயாராகும் அமலாபாலின் பறவை

இயக்குனர் விஜய் உடனான திருமண முறிவுக்கு பிறகு அமலாபாலுக்கு திரையுலகில் நாட்டம் குறைந்து விட்டதோ என எண்ணத் தோன்றும் வகையில் அவர் நடித்த படங்கள் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலேயே வெளியாகியுள்ளன.

கடைசியாக அவர் நடித்த ஆடை என்கிற திரைப்படம் தமிழில் வெளியானது அதை அடுத்து அவர் நடித்துள்ள அதோ அந்த பறவை போல என்கிற திரைப்படம் கிட்டத்தட்ட தயாராகி நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

சில காரணங்களால் அந்தப்படம் வெளிவர தாமதம் ஆன நிலையில் தற்போது அந்த படத்தை வெளியிடும் உரிமையை ஸ்கொயர் என்டர்டைன்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது

விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது இந்த படத்தை கே.ஆர் வினோத் என்பவர் இயக்கியுள்ளார்

Most Popular

Recent Comments