சிபிராஜ், தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகிவரும் படம் மாயோன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுத, என் கிஷோர் இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஒரு புதிய முயற்சியாக பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் முழுமையான திரைப்பட அனுபவத்தை உணரும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இளையராஜா இசையில் மாயோனே என்கிற பாடலும் சிங்கார மதன மோகன என்கிற பாடலும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதில் சிங்கார மதன மோகன பாடலை கேட்ட ரசிகர்கள் பகவான் கிருஷ்ணரின் ஆந்தம் என இந்தப் பாடலை பாராட்டினார்கள்.
இந்த நிலையில் மாயோன் படம் வரும் ஜூன் 17ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாக கொண்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தப் படம் உருவாகி உள்ளது.