கழுகு படம் மூலம் தமிழில் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தும் பிக்பாஸ் தமிழ் சீசனிலும் கலந்துகொண்டு ரசிகர்களிடம் நன்கு அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. தற்போது தெலுங்கு பிக்பாஸ் அல்டிமேட் சீசனிலும் கலக்கி வருகிறார். இந்தநிலையில் அவர் நாகா என்கிற படத்தில் நாக அம்மனின் பக்தையாக நடிக்கிறார்.

இவருடன் இன்னொரு பிக்பாஸ் பிரபலமான ரைசா வில்சன் இணைந்து நடிக்கிறார். சத்யராஜ் நடித்த அடிதடி, மகா நடிகன் மற்றும் பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த கே முருகன் இந்த படத்தை தயாரிக்கிறார். நஞ்சுபுரம் அழகு குட்டி செல்லம் ஆகிய படங்களை இயக்கிய சார்லஸ் இந்த படத்தை இயக்குகிறார்

நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் யாரும் யாருக்கும் ஜோடி இல்லை.

அம்மன் படம் என்பதால் பிரமாண்ட கிராபிக்ஸ் செலவில் இந்த படம் தயாராகிறது. புராணங்களில் சொல்லப்படுவது இந்த காலத்திலும் உண்மையாக இருக்கத்தான் செய்கிறது என்பதை கிராபிக்ஸ் டெக்னிக்கல் காட்சியுடன் பிரமாண்டமாக சொல்ல இருக்கிறார் இக்குனர் சார்லஸ்.

நீதித்துறையால் நெருங்க கூட முடியாத, பல்லாயிரம் பெண்களின் வாழ்வை அழித்த அநீதியின் மொத்த உருவமாக திகழும் ஒரு தீயவனை ஒரு பெண் தெய்வம் அவதாரம் எடுத்து வந்து சங்காரம் செய்து அழிப்பதே இந்த படத்தின் ஒன்லைன்.
வரும் 27ம் தேதி முதல் பாண்டிச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி அதை தொடர்ந்து ஹம்பி, கேரள கடற்கரையோரம் என தொடர்ந்து 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.