மலையாளத்தின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நிவின்பாலி. தமிழில் பல வருடங்களுக்கு முன்பு நேரம் என்கிற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ரிச்சி என்கிற நேரடி தமிழ் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் இயக்குனர் ராம் டைரக்ஷனில் மீண்டும் தனது இரண்டாவது தமிழ் படத்தில் நடித்துள்ளார் நிவின்பாலி. அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சூரி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.
சென்னையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் தத்ரூபமாக மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்றுள்ளது, விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்பட் உள்ளன