ஜெய் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரபாண்டியபுரம் என்கிற படம் வெளியானது. சுசீந்திரன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘குற்றம் குற்றமே’.

ஆக்சன் படமாக கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஒருநாள் முன்னதாக விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது.
மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமான கேஜிஎப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியும் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் ஜெய் படமும் வெளியாவது ஆச்சரியம் தான்.

ஆனால் நிச்சயமாக இது அவர்கள் படத்துக்கு போட்டியாக இல்லை.. அவர்கள் படத்தை பார்த்தவர்கள் அல்லது முதல் நாளே பார்க்க முடியாதவர்கள் தமிழ் புத்தாண்டு தினத்தன்று கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ஜெய் படத்தையும் வீட்டில் அமர்ந்தபடியே ஹாயாக பார்க்கலாம் என்பது நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு போனஸ் தான்.