பாண்டி, முருகேசன், திரேஷ்குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ் என முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகியுள்ள படம் கம்பெனி. இந்த படத்தை எஸ்.தங்கராஜ் இயக்கியுள்ளார் ஸ்ரீ மகா சினிமாஸ் சார்பில் முருகேசன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, “நான்கு பசங்கள பார்த்ததும் நம்ம அலைகள் ஓய்வதில்லை போல இருக்குமோ என்று நினைத்தேன் ஆனால் இது வித்தியாசமாக இருக்கும் என்று தோன்றுகிறது

உள்ளே என்ன வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனாலும் நான்கு பசங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்” என்று பாராட்டினார்.
