V4UMEDIA
HomeNewsKollywoodஆந்திர ரசிகர்களை அண்ணாந்து பார்க்க வைத்த விஷால்

ஆந்திர ரசிகர்களை அண்ணாந்து பார்க்க வைத்த விஷால்

வீரமே வாகை சூடும் படத்தை தொடர்ந்து விஷால் தற்போது லத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். புதியவரான வினோத் குமார் இயக்கும் இந்தப்படத்தை விஷாலின் வலது கரங்களாக விளங்கும் நடிகர்கள் ரமணாவும் நந்தாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஒரு கையில் லத்தியுடன் விஷால் திரும்பி நிற்கும் அந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக ஆந்திராவை பொருத்தவரை விஷாலின் படங்களுக்கு என அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர் அதனால் ஹைதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் உள்ள மிகப்பெரிய மால்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 50அடி கட் அவுட்டாக வைக்கப்பட்டுள்ளது.

அந்த மாலுக்கு வரும் ரசிகர்கள் அனைவரும் இது யாருடைய கட்டவுட் என அண்ணாந்து பார்த்து தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பலர் அவற்றின் முன் நின்று செல்பியும் எடுத்து கொள்கின்றனர். இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது

Most Popular

Recent Comments