சில கதாநாயகர்களுக்கு சுந்தர்சி ஆஸ்தான இயக்குனர் என்றால், ஹீரோவாக நடிக்கும் சுந்தர்.சியின் ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் பத்ரி வெங்கடேஷ். இவரது இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி நடித்த நாங்க ரொம்ப பிசி என்கிற படம் ஒரு தீபாவளி தினத்தில் சன் டிவியில் நேரடியாகவே வெளியானது. இந்த நிலையில் சுந்தர்.சி தயாரிப்பில் அவர் ஹீரோவாக நடிக்க ஜெய் வில்லனாக நடிக்க மீண்டும் பத்ரி வெங்கடேஷ் ஒரு படத்தை இயக்கியுள்ளார்.
தற்போது இந்த படத்திற்கு பட்டாம்பூச்சி என டைட்டில் வைக்கப்பட்டு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் டைரக்சனில் பிசியாக இருக்கும் சுந்தர்.சி ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.