ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது திரை உலகில் எப்போதாவது அபூர்வமாக நடக்கும் விஷயம். அந்த வகையில் தற்போது ஓ மை டாக் என்கிற படத்தில் நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் நடித்துள்ளார் அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் அருண் விஜய்யுடன் அவரது தந்தை விஜயகுமாரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
இதேபோல சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என தந்தை மகன் பேரன் கூட்டணி இதைப்போன்ற ஒரு சாதனை படத்தில் நடித்திருந்தனர். இரண்டாவதாக இந்த சாதனையை விஜயகுமார் குடும்பம் செய்துள்ளது.
இந்த ஓ மை காட் திரைப்படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.. சரோவ் சண்முகம் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் ஒவ்வொரு குழந்தைகளும், செல்ல பிராணி மீது அன்பு கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பாக ‘உருவாகி இருக்கிறது.