அஞ்சாதே படத்தில் இயக்குனர் மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டு சற்று வில்லத்தனம் கலந்த நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் நடிகர் அஜ்மல். அதன்பின் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் மற்றும் நடிகர் ஜெய்வந்த் ஆகியோருடன் அஜ்மல் இணைந்து நடிக்கும் தீர்க்கதரிசி என்கிற படம் தயாராகி வருகிறது.

இந்த படத்தை பிஜி மோகன் மற்றும் எல்.ஆர் சுந்தரபாண்டி ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.