சுந்தர்.சி இயக்கத்தில் அஜித் நடித்த உன்னைத்தேடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறிய இவர், அதன்பின் சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக்கொடி கட்டு படத்தில் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு என்கிற பாடலின் மூலம் இன்னும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து திருட்டுப்பயலே படத்தில் வித்தியாசமான வில்லத்தனம் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்த இவர் சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்து ரஜினி ரசிகர்கள் அன்புக்கும் பாத்திரமானார்.

அதுமட்டுமல்ல சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் ஒருவிதமான நளினமான நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திரையுலகில் நடிப்பதற்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய சுந்தர்.சியின் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார்..

ஆம்.. தற்போது ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மாளவிகா. இந்த படத்தின் படப்பிடிப்பில் மாளவிகா கலந்துகொண்ட புகைப்படத்தை நடிகர் மனோபாலா வெளியிட்டுள்ளார்.


























