விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மீண்டும் நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் துவக்கத்திலிருந்து வெளியான விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோரின் கதாபாத்திர பெயர்கள் கொண்ட போஸ்டர்கள் மற்றும் டீசர் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்தன

கடந்த மாதம் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி இருந்தது. குறிப்பாக இந்த பாடல் காட்சியில் விஜய்சேதுபதியும் சமந்தாவும் மட்டுமே ஆடிப்பாடி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதேசமயம் ஒரு தயாரிப்பாளராக நயன்தாராவும் கலந்துகொண்டு படக்குழுவினரை உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இன்று இந்தப் பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பில் கேக் வெட்டி அமர்க்களமாக கொண்டாடியுள்ளனர்