V4UMEDIA
HomeNewsKollywood30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ராசுக்குட்டி ஜோடி

30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ராசுக்குட்டி ஜோடி

பிக்பாஸ் புகழ் கவின் மற்றும் தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் லேட்டஸ்ட்டாக புகழ் வளையத்திற்குள் வந்திருக்கும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். அம்பேத் குமார் தயாரிக்கும் இந்த படத்தை கணேஷ் கே.பாபு என்பவர் இயக்குகிறார் இந்த படத்தில் முக்கியமான வேடங்களில் இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் முப்பது வருடங்களுக்கு முன்பு ராசுககுட்டி என்கிற படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் என்பது இப்போதைய ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இடையில் சுயம்வரம் படத்தில் இவர்கள் நடித்திருந்தாலும் கூட, இருவரும் இணைந்து நடிப்பதற்கான காட்சிகள் அதிகம் இடம் பெறவில்லை. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது

Most Popular

Recent Comments