மாநாடு என்கிற சூப்பர் டூப்பர் கமர்சியல் ஹிட் படத்தை கொடுத்த வெங்கட்பிரபு அடுத்ததாக மன்மதலீலை என்கிற படத்தை குறுகிய கால தயாரிப்பாக இயக்கி முடித்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீசுக்கு தயார் செய்துவிட்டார்.
இந்தப்படம் அடல்ட் ஜானரில் உருவாகி உள்ளது என்கிற விஷயத்தை அவர் வெளியே தெரிவித்த நாளிலிருந்து ஏதோ தெய்வ குற்றம் செய்தது போல வெங்கட் பிரபுவா இப்படிப்பட்ட படத்தை எடுத்துள்ளார் என்பது போல பலரும் குற்றச்சாட்டுகள் கூறுவது போலவே தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கட்பிரபு, “பலரும் நினைப்பது போன்று இது ஒன்றும் ஆபாச படம் அல்ல.. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படமாகத்தான் இதை இயக்கியுள்ளேன்..
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.. அதை நான் மறந்துவிட மாட்டேன்” என்று இந்தப் படத்தின் மீது வீசப்பட்ட வீண் பழியை துடைத்து எறியும் விதமாக தனது பேச்சில் விளக்கமளித்தார்.