V4UMEDIA
HomeNewsKollywoodகுஞ்சாக்கோ போபன் படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்

குஞ்சாக்கோ போபன் படத்தை பாராட்டிய பா.ரஞ்சித்

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்த ‘பட’ என்கிற படம் வெளியானது. கே.எம்.கமல் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் ஆதிவாசிகள் மற்றும் தலித் நடத்திய போராட்ட களத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் இந்த படம் பெற்றுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் வகையில் படங்களை தயாரித்தும்  இயக்கியும் வரும் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு இந்தப்படம் பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை. இந்த படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் படத்தின் சிறப்பம்சமே இதன் திரைக்கதை தான் என்று கூறி இயக்குனரையும் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட நடிகர்களையும் பாராட்டியுள்ளார் பா.ரஞ்சித்.

மேலும், “நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களை தத்துரூபமாக நடந்தது போன்றே எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் படமாக்கியிருப்பது ஆச்சரியம் தருகிறது.. தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களுக்கே திருப்பித் தரப்பட வேண்டும்” என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் பா.ரஞ்சித்.

Most Popular

Recent Comments