சைக்கோ திரைப்படங்கள் எப்போதுமே நிச்சயமான வெற்றியை உறுதி செய்து விடும். சிவப்பு ரோஜாக்கள், ஊமை விழிகள், லேட்டஸ்ட்டாக வெளியான ராட்சசன் என பல உதாரணங்களை சொல்லலாம். அந்தவகையில் அறிமுக இயக்குனர் சாய் மோரா இயக்கத்தில் உருவாகியுள்ள முகமறியான் படமும் சைக்கோ த்ரில்லராக உருவாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் திலிப் குமார் வில்லனாக நடித்துள்ளாராம்.
ஆந்திராவில் உள்ள காடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர் இந்த படம் பற்றி இயக்குனர் கூறும்போது,”காதலி ஏமாற்றங்களை சந்திக்கும்போது அந்த வலிகளை உணரும் இதயங்களின் கண்ணீர் துளிகளை கதைக்களமாக்கி இருப்பதாக கூறியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.