ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய விஜய்மில்டன் கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள என சில படங்களை இயக்கினார். இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சரத்குமார் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்..
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு டையூ டாமன் தீவுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் விஜய் மில்டன்.
மக்கள் மழையை அவரவர் பார்க்கும் தொழில்களுக்கு ஏற்ப ஒரு வரமாகவோ அல்லது சாபமாகவோ உணர்கிறார்கள். ஆனால், இந்தப்படத்தின் நாயகன் ஒரு விதிவிலக்காக இருக்கிறான். தவிர மழையை விரும்பாததற்கு அவனுக்கு தகுந்த காரணமும் உள்ளது. பெரிய பிளாஸ்பேக் என எதுவும் இல்லாவிட்டாலும் கூட, மழையுடன் தொடர்புடைய நினைவுகள் சில அவனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் இறுதியில் இவையெல்லாவற்றிலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.


















