சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நுழைந்து தற்போது பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை வாணி போஜன். தற்போது பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் ரேக்ளா திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக வாணி போஜன் நடிக்கிறார். வால்டர் படத்தை இயக்கிய அன்பு தான் இந்த படத்தை இயக்குகிறார்.
“ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் வாணிபோஜன் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். மிகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கக் கூடியவர். அதுமட்டுமல்ல இந்த படத்தின் கதைக்கு தூணாக இருக்கும் அந்த செவிலியர் கதாபாத்திரத்தில் வாணிபூஜன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதால்தான் அவரை தேர்வு செய்தோம்” என்று கூறுகிறார் இயக்குனர் அன்பு.
இந்த படத்தில் ரேக்ளா ரேஸில் கலந்து கொள்ளும் மாடுகளைப் பராமரிக்கும் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறாராம். முக்கியமான ஒரு சமூக பிரச்சனையை பற்றி இந்த படம் பேசுகிறது என்றும் கூறியுள்ளார் இயக்குனர் அன்பு