சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது முசாபிர் என்கிற வீடியோ ஆல்பத்தை உருவாகும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். வழக்கமாக உருவாக்கப்படும் மியூசிக் வீடியோ பாணியில் இல்லாமல் எளிமையான மனிதர்களின் வாழ்வியல் கொண்டாட்டங்களை மையப்படுத்தி இதனை உருவாக்கி வருகிறார் ஐஸ்வர்யா.
நடன இயக்குனர் ஜானி, ஷ்ரஷ்டி சர்மா ஆகியோர் இந்த ஆல்பத்தில் நடித்துள்ளனர்.. கிட்டத்தட்ட இந்த ஆல்பம் வேலைகளை ஐஸ்வர்யா முடித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சீடர் என்றே சொல்லப்படக்கூடிய அவரது தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸை நேற்று ஐஸ்வர்யா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தான் உருவாக்கியுள்ள வீடியோ ஆல்பத்தையும் அவரிடம் காட்டியதாக தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களும் அதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த சந்திப்பு குறித்து ஐஸ்வர்யா கூறும்போது, “ராகவாலாரன்ஸ் அண்ணாவை சந்தித்து வந்தவுடன் மிகப்பெரிய புத்துணர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.. ராகவா லாரன்ஸும் ராகவேந்திரா சாமி உங்களுடன் எப்போதும் துணை இருப்பார் சகோதரி என வாழ்த்தியுள்ளார்..