இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி, அங்கேயும் வலுவான இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார். அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மட்டுமல்ல, அதற்கான டைட்டில்களும் கூட, சைத்தான், எமன், கொலைகாரன், திமிரு பிடிச்சவன் என ஏடாகூடமாக, அதேசமயம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விதமாகத்தான் இருக்கின்றன.
அந்தவகையில் தற்போது பாலாஜி குமார் என்பவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலை’. திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த விஜய் ஆண்டனி, இதில் ஒருபடி மேலே போய் துப்பறியும் நிபுணராக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக போலீஸ் அதிகாரியாக ரித்திகா சிங் நடித்துள்ளார்.
முக்கிய வேடங்களில் ராதிகா, ஜான் விஜய், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒரு பெண் மாடல் அழகி கொலை செய்யப்பட கொலைக்கான பின்னணி என்ன? கொலைக்காரன் யார்? என்பதை விஜய் ஆண்டனி கண்டுபிடிப்பதாக இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழை போல தெலுங்கிலும் விஜய் ஆண்டனியின் படங்களுக்கென ரசிகர்கள் அதிகம் இருப்பதால் வழக்கம்போல இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. தெலுங்கில் இதற்கு ஹத்யா என டைட்டில் வைத்துள்ளனர்..