கார்த்தி நடித்த நான் மகான் அல்ல என்கிற படத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தவகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளில் தங்களது தனித்துவமான முத்திரையை பதித்து வருபவர்கள் அன்புறிவ் என்கிற இரட்டை சகோதரர்களான ஸ்டண்ட் மாஸ்டர்கள்.
கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ள இவர்கள், தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட்டிலும் அதிகம் தேடப்படும் சண்டைப்பயிற்சியாளர்களாக வலம் வருகிறார்கள். ஆனாலும் இவர்கள் சினிமாவிற்குள் நுழைந்து என்னவோ இயக்குனர்களாகும் கனவில் தான்.. அதற்கான வாய்ப்பு தற்போது அவர்களுக்கு கைகூடி வந்தது.. ஆம்.. ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போவதாக கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டு அறிவிப்பாக வெளியானது.
ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக இந்த படத்தின் டைரக்ஷனில் இருந்து தற்போது விலகி கொண்டுள்ளார்கள் அன்பறிவு மாஸ்டர்ஸ். தென்னிந்திய அளவில் தாங்கள் பணியாற்றிய வேண்டிய படங்களின் பட்டியல் அதிகமாக இருப்பதால் பணிச்சுமை காரணமாக இந்த படத்தை இயக்க முடியாமல் போனதற்கு வருந்துவதாக அவர்கள் இதற்கு காரணம் கூறியுள்ளனர். அதேசமயம் இந்த படத்தில் தாங்கள் சண்டை பயிற்சியாளராக தொடர்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.