எண்பதுகளில் கதாநாயகனாக கொடிகட்டி பறந்த இயக்குனர் கே.பாக்யராஜ், ஒரு கட்டத்திற்கு பிறகு, கடந்த 20 வருடங்களாக சிறந்த குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 20 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் 3.6.9 என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை சிவ மாதவ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக பிஜிஎஸ் என்கிற புதுமுக நடிகர் நடித்து உள்ளார்.
தமிழ்சினிமாவில் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களைப் போல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ள இவர், சுமார் ஆறு பக்கங்கள் கொண்ட வசனத்தை அசத்தலாக பேசி நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.. 81 நிமிடத்தில் இந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பை நடத்தி முடித்து, உலக சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.