V4UMEDIA
HomeNewsKollywoodசூர்யாவுடன் ஹாட்ரிக் அடிக்க தயாராகும் ஜிவி பிரகாஷ்

சூர்யாவுடன் ஹாட்ரிக் அடிக்க தயாராகும் ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமாவில வெகுசிலரே இரண்டு துறைகளை தேர்ந்தெடுத்து அதில் சரியானபடி இரட்டை குதிரை சவாரி செய்து வருகிறார்கள். அந்த வெகு சிலரில் ஒருவர் தான் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ். ஒருபக்கம் நடித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார் ஜிவி பிரகாஷ்.

அந்தவகையில் கடந்த 15 வருடங்களில் கார்த்தி நடித்த சில படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ். சூர்யாவுக்கோ முதன்முறையாக சூரரைப்போற்று படத்திற்கு தான் இசையமைத்தார். ஆனால் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படம் என சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை அமைக்கிறார்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல இந்த இரண்டு வருடங்களுக்குள்ளேயே சூர்யாவுடன் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றி ஹாட்ரிக் சாதனை படைக்க தயாராகி வருகிறார் ஜிவி பிரகாஷ்.

Most Popular

Recent Comments