V4UMEDIA
HomeNewsKollywoodகாமெடி ஏரியாவுக்குள் ஜெயம் ரவியை இழுத்துக்கொண்டே எம்.ராஜேஷ்

காமெடி ஏரியாவுக்குள் ஜெயம் ரவியை இழுத்துக்கொண்டே எம்.ராஜேஷ்

சிவா மனசுல சக்தி என்கிற படத்தில் இயக்குனராக அறிமுகமான எம்.ராஜேஷ் தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என 100% காமெடிக்கு உத்தரவாதம் கொடுக்கும் படங்களாக இயக்கி வந்தார். குறிப்பாக இவரது படங்களில் நடிகர் சந்தானம் முக்கியம் தூணாக இருந்ததுடன், அவரது வளர்ச்சிக்கு காரணமாகவும் எம்.ராஜேஷின் படங்கள் அமைந்தன.

இந்த நிலையில் ராஜேஷ் தற்போது ஜெயம்ரவியை வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறார். கடந்த சில மாதங்களாக யூகமாக சொல்லப்பட்டு வந்த இந்த தகவல், தற்போது இந்த படத்தை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன் நிறுவனம் மூலமாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக படங்களில் சற்று சீரியஸாக மாறிவிட்ட ஜெயம் ரவியை இயக்குனர் எம்.ராஜேஷ், தனது கலகலப்பு கூட்டணிக்குள் இழுத்திருப்பதால் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான ஜெயம் ரவியை பார்க்கலாம் என நம்புவோம்..

Most Popular

Recent Comments