தமிழில் இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்களையும் நடிகர் கமல் சுவையான முறையில் தொகுத்து வழங்கினார். ஐந்தாவது சீசனில் மட்டும் அவரது உடல்நல குறைவு காரணமாக அவருக்கு பதிலாக ஒரே ஒரு வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
போட்டியாளர்களை கமல் கையாண்ட முறைக்கும் ரம்யா கிருஷ்ணன் டீல் செய்த விதத்திற்கும் நிறையவே வித்தியாசம் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் புதிதாக துவங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வந்த கமல் இந்த நிகழ்ச்சி காரணமாக தன்னுடைய விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதாக கூறி கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.
அதனால் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போவது என போட்டியாளர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த வாரம் முதல் யாரும் எதிர்பாராத விதமாக சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சிம்புவை பார்த்ததும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே இருந்த போட்டியாளர்கள் துள்ளிக்குதிக்காத குறைதான்.
அதிலும் பாலாஜி முருகதாஸ் சிம்புவை பார்த்தபோது தனது கோட்டையே கழுத்தை சுற்றி வீசி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரசிகனாக அந்த சந்தோஷத்தை தான் அனுபவிப்பதாக கூறிய பாலாஜி முருகதாஸ் வல்லவன் படத்தில் ஒரு பாடலுக்கு சிம்புவுடன் இணைந்து ஆடும் சின்ன குழந்தைகளில் ஒருவராக தான் வந்திருந்ததாக ஒரு அணு குண்டைத் தூக்கிப் போட்டார் இதை கேட்டதும் சிம்பு இப்படி எல்லாம் உண்மையை சொன்னால் எனக்கு ஏதோ வயசாகி விட்டது போல தோன்றுகிறது என வெட்கப்பட்டுக்கொண்டே கூறினார். சிம்புவிற்கு வயதாகி விட்டதா என்ன ?