இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்து வரும் படம் யானை. என்னதான் உறவினர்களாக இருந்தாலும் இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்து பணியாற்றுவதற்கு இத்தனை வருடம் கழித்து இப்போதுதான் நேரம் கூடி வந்துள்ளது. அதனால் இந்த படத்தை எப்படியும் வெற்றிப்படமாக கொடுத்து விட வேண்டும் என்கிற முனைப்பு இருவரிடமும் தெரிகிறது.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க ராதிகா யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தநிலையில் சம்மர் கொண்டாட்டமாக வரும் மே 6-ஆம் தேதி யானை படம் ரிலீசாகும் என்று தற்போது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.