பார்த்திபன் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. சாதனை முயற்சியாக இந்த படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரமாக தான் மட்டுமே நடித்திருந்தார் பார்த்திபன். இந்த படம் தேசிய விருது உட்பட, பல சர்வதேச விருதுகளை அள்ளியது.
இந்தப்படத்தின் உயிர்நாடியான கதையைக் கேட்டதுமே இந்தியில் அபிஷேக் பச்சன் தான் நடிப்பதாக சொல்ல, அந்தப் படத்தை தானே தயாரிக்க முன்வந்தார் அமிதாப்பச்சன்.. பார்த்திபனே அந்தப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில் இந்த படம் அதிகாரப்பூர்வமாக இந்தோனேசியாவின் பஹாமா மொழியில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. பி.டி ஃபால்கன் நவீன் என்பவர் இதை தயாரிக்கிறார் இந்தோனேசிய மொழியில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.