V4UMEDIA
HomeNewsKollywoodமாலத்தீவில் இருந்து பூஜா ஹெக்டேவின் அரபிக்குத்து ஆட்டம் செம வைரல்

மாலத்தீவில் இருந்து பூஜா ஹெக்டேவின் அரபிக்குத்து ஆட்டம் செம வைரல்

முகமூடி படத்துக்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இணைந்து நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழில் நுழைந்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.. நேற்றைய தினம் இந்தப்படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து பாடல் கிட்டத்தட்ட 35 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படித்து வருகிறது.

இந்தப்படத்தில் விஜய்யின் நடனத்தோடு பூஜா ஹெக்டேவின் நடனத்துக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இரண்டு வருடங்களுக்கு முன் இணைந்து ஆடிய புட்டபொம்மா பாடலுக்கு பிறகு இதிலும் பூஜா ஹெக்டே அசத்துகிறார்..

இந்தநிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள பூஜா ஹெக்டே, கடலில் சென்றுகொண்டிருக்கும் படகில் இருந்தபடி இந்தப்பாடலுக்கு நடனம் ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இவர் வெளியிட்ட இந்த வீடியோவுக்கு இதுவரை பதினைந்து லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளன.  

Most Popular

Recent Comments