கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தெலுங்கில் உருவாகி, அதேசமயம் பான் இந்தியா படமாக வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்திருந்த இந்தப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தின் பாடல்கள், குறிப்பாக சாமிசாமி மற்றும் ஓ ஆண்டவா ஆகிய இரண்டு பாடல்கள் பாலிவுட்டையும் அதிர வைத்துள்ளன.
இதை தொடர்ந்து தேவிஸ்ரீ பிரசாத்திற்கு பாலிவுட்டில் உள்ள பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன ‘புஷ்பா – தி ரைஸ்; என் இசை பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்து விட்டது என நெகிழ்ந்து போயுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.
தனது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இசையில் தனது புதிய அணுகுமுறையை நம்பியதற்காக இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜுன் மற்றும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்..