இன்றைய நிலையில் ஒரு படத்தின் பாடல், ட்ரெய்லர் மற்றும் டீசர் என எது வெளியிடப்பட்டாலும் யூட்யூப்பில் அவற்றின் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்க்கிறார்கள். சிறிய படங்களுக்கு இது வியாபார ரீதியாக கூட உதவுகிறது. ஆனால் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அதையும் தாண்டி அவர்களது ரசிகர்கள் தங்களது பலத்தை தாங்களே மெச்சிக்கொள்ளும் ஒரு விஷயமாகவும் தங்கள் பலத்தை எதிரணியினருக்கு காட்டும் நிகழ்வாகவும் அமைந்து விடுகிறது.
அப்படித்தான் நேற்று முன்தினம் மாலை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து பாடல் யூட்யூப்பைபையே மிரள வைத்துள்ளது. சொல்லப்போனால் இதற்கு முன் வெளியான விஜய் பட பாடல், டீசர் போன்றவை வெளியான சமயத்தில் செய்த சாதனைகளை இந்த லிரிக் வீடியோ அசால்ட்டாக முறியடித்து இப்போதுவரை 3௦ மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
அனிருத்தின் இசை, சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியது, விஜய், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள சில காட்சிகள் இதனுடன் இணைக்கப்பட்டிருந்தது என எல்லாமாக சேர்ந்து இந்த பாடலை அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் பார்க்கும் விதமாக இழுத்து வந்துள்ளது என்பதே இந்த அளவு ரீச் ஆனதற்கு முக்கிய காரணம்.