V4UMEDIA
HomeNewsKollywoodஹன்ஷிகாவின் படத்தை துவங்கி வைத்த விஜய்சேதுபதி

ஹன்ஷிகாவின் படத்தை துவங்கி வைத்த விஜய்சேதுபதி

சிம்பு, ஹன்ஷிகா நடித்த வாலு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய்\சந்தர். அதன்பின் ஸ்கெட்ச், சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய விஜய்சந்தர் தற்போது ஃபிலிம் வொர்க்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அவரது முதல் பட கதாநாயகியான ஹன்சிகா தான் இந்தப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்துவரும் கூகுள் குட்டப்பன் என்கிற படத்தை இயக்கிவரும் இரட்டை இயக்குனர்களான சபரி கிரீசன், சரவணன் இருவரும் இணைந்து இந்தப்படத்தை இயக்குகிறார்கள் சார்பட்டா பரம்பரை படம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த சந்தோஷ் பிரதாப் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் இன்று துவங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கேமராவை இயக்க, விஜய்சேதுபதி  கிளாப் போர்டை அடிக்க, கே.எஸ் ரவிக்குமார் முதல் காட்சியை இயக்கினார்.

Most Popular

Recent Comments