V4UMEDIA
HomeNewsKollywoodசிபிராஜ் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வித்யாசாகரின் மகன்

சிபிராஜ் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வித்யாசாகரின் மகன்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா ஆகியோர் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் திரையுலகில் நுழைந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் வித்யாசாகர். மெலடியில் மனதை உருகவைத்தவர், குத்துப்பாடல்களின் ராஜாவாக வலம்வந்து திரையரங்குகளில் ரசிகர்களை ஒன்ஸ்மோர் கேட்க வைக்கும் பாடல்களை கொடுத்தார்.

தற்போது அவரது மகன் ஹர்ஷவர்தன் U, சிபிராஜ் நடிக்க உள்ள அவரது இருபதாவது படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாண்டியன் ஆதிமூலம் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் எஃப்எம், டிவி ரியாலிட்டி ஷோக்கள், டிவி தொடர்கள் மற்றும் திரைப்படத் துறையில் என கடந்த பத்தாண்டுகளாக ஊடக உலகில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அதேபோல ஹர்ஷவர்தன் U, தனது தந்தை வித்யாசாகரிடம் மட்டும் அல்லாமல், ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், தமன் உட்பட பலருக்கு கீபோர்டு புரோகிராமராக பணியாற்றியுள்ளார். இந்தப்படம் ஆக்சன் த்ரில்லாராக உருவாக இருக்கிறது..

இசையமைப்பாளராக இது அறிமுகப்படம் என்றாலும் இதுபோன்ற ஜானரில் உருவான பல படங்களுக்கு தான் பணிபுரிந்துள்ளதால் இந்தப்படத்திற்கான பின்னணி இசையை அற்புதமாக உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஹர்ஷவர்தன் U பின்னணி இசைக்கான வாய்ப்பும் இந்தப்படத்தில் நிறைய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதில் இன்னொரு ஆச்சர்யமான ஒற்றுமையும் இருக்கிறது. சிபிராஜின் தந்தை சத்யராஜ் இயக்குனராக இயக்கிய ஒரே படமான வில்லாதி வில்லன் படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.. தற்போது சத்யராஜின் மகன் சிபிராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வித்யாசாகரின் மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது ஆச்சர்யமான விஷயம் தானே.  

Most Popular

Recent Comments