ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை அந்தப்படத்தில் வெம்புலி மற்றும் டான்சிங் ரோஸ் கதாபாத்திரங்களில் நடித்தவர்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டவில்லை. தொண்ணூறுகளில் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்த ஜி.எம்.சுந்தரும் இந்தப்படம் மூலம் மீண்டும் திரை வெளிச்சத்துக்குள் வந்துள்ளார்.

பல படங்களில் நடித்தும், இடையில் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியும் இருந்த அவரை, கடந்த வருடம் வெளியான மண்டேலா மற்றும் சார்பட்டா பரம்பரை என இரண்டே இரண்டு படங்கள் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியவைத்து விட்டன.

மண்டேலாவில் ஊர் தலைவராகவும் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி மற்றும் டான்சிங் ரோஸ் ஆகியோரின் பாக்ஸிங் குருவாக துரைக்கண்ணு வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் தான் ஜி.எம்.சுந்தர்.

இந்தநிலையில் அடுத்ததாக வெளிவர உள்ள அஜித்தின் வலிமை படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஜிஎம் சுந்தர்.

படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. .