V4UMEDIA
HomeNewsKollywoodஎன் வழி தனி வழி ; ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் திட்டம்

என் வழி தனி வழி ; ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் திட்டம்

பிறந்தநாள் அன்று நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடுவது, கோவிலுக்கு செல்வது, அல்லது படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடி விட்டு வேலையை கவனிப்பது என இதில் ஏதோ ஒன்றைத்தான் இன்றைய நட்சத்திரங்கள் குறிப்பாக கதாநாயகிகள் தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி நடிகை ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் வரப்போகிறது. ஆனால் இந்தமுறை என் வழி தனி வழி என்று சொல்லும் விதமாக தனது பிறந்தநாள் கொண்டாட்ட திட்டத்தை அறிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்

ஆம். இந்தமுறை தனது பிறந்தநாளை வித்தியாசமான முறையில், அதேசமயம் சமூக நோக்கிலான பார்வையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் ஸ்ருதிஹாசன். அந்தவகையில் ஜனவரி 27ஆம் தேதி முதல் சோசியல் மீடியாவில் ரசிகர்களை நேரலை மூலம் சந்திக்க இருக்கிறார்.

அதேசமயம் ரசிகர்களுடன் வெறும் உரையாடல் என இல்லாமல் இந்த நேரலை நிகழ்வுகள் மூலம்,  பொதுவாக சமூகத்தில் விவாதிக்க மறுக்கப்படும் பல தலைப்புகளில், விவாதங்களை, உரையாடலை மேற்கொண்டு, அந்த விஷயங்களின் மீது மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்..

இந்த  நேரலை அமர்வுகளில்  ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பல்வேறு செல்வாக்கு மிக்க பிரபலங்கள் மற்றும் தொகுப்பாளர்கள் இந்த தலைப்புகளை பற்றி விரிவாக விவாதிக்க இருக்கின்றனர். குறிப்பாக நம் சமூகத்தில் பேச மறுக்கப்படும் விசயங்களை பற்றி உரையாடலை நிகழ்த்தி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த உரையாடல்களை இயல்பாக்கும் முயற்சியில் தான் இந்த பிறந்தநாளில் ஈடுபடவுள்ளார் ஸ்ருதிஹாசன்.

ஆமாம் ஏன் இந்த மாற்றம் ஸ்ருதியிடம் ?

“ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாட, பல வழிகள் உள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரை கொண்டாட்டம் என்பது,  நான் அக்கறை கொண்ட விஷயங்களை பற்றி நேர்மையான விவாதங்களை சமூகத்தில் ஏற்படுத்துவதுதான். இதுகுறித்து இன்னும் சமூகத்தில் அதிகம் பேசப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த தலைப்புகளில் நிகழும்,  உரையாடலில் நிறைய நபர்களை இணைத்து, நேரலையின்போது பலரிடமிருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களைப் பெறுவதும், இந்தச் சிக்கல்களை குறித்து அவர்களை சிந்திக்க வைப்பதும், பகிரவும் மற்றும் விவாதிக்கவும் வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்கிறார் ஸ்ருதி.

Most Popular

Recent Comments