நடிகர் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் நாளை (செப்-17) ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் நாயகனாக விஜய்சேதுபதியும் நாயகியாக தாப்ஸியும் நடித்துள்ள ‘அன்பெல் சேதுபதி’ திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஃபேன்டசி , ஹாரர் பாணியில் உருவாக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் கடந்த ஆக-25 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் நாளை ஹாட்ஸ்டாரில் ‘அன்பெல் சேதுபதி ‘ வெளியாகிறது.
மேலும் இப்படத்தில் நடிகர்கள் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.