நடிகர் சூர்யா தயாரிப்பில் இயக்குநர் பாலா இயக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் பாலாவின் அடுத்த திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்கிறார். நடிகர்கள் அதர்வா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே இயக்குநர் பாலா இயக்கத்தில் நந்தா, அவன் இவன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன்சங்கர் ராஜா மூன்றாவது முறையாக அவருடன் இணைகிறார்.
இந்தப் படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.