V4UMEDIA
HomeNewsKollywoodஅண்ணன் மகனுடன் தனுஷ்... வைரலாகும் புகைப்படங்கள்!

அண்ணன் மகனுடன் தனுஷ்… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் தனுஷ் செல்வராகவனின் மகன் ரிஷிகேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட்டின் பிரபலமான வெற்றிக் கூட்டணி செல்வராகவன்- தனுஷ் இணை. இவர்களின் தந்தை இயக்குனராக இருந்தாலும் இருவரும் தங்கள் தனித்திறமைகளை பயன்படுத்தியே தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நபர்களாக உருவெடுத்துள்ளனர். 

தற்போது செல்வராகவனும் நடிப்பில் களமிறங்கியுள்ளார். சாணிக் காயிதம் படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். 

இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி ஜோடிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தான் இவர்களுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயர் வைத்தனர். செல்வராகவன் கடைசி மகன் ரிஷிகேஷ் உடன் பொழுதைக் கழித்த புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகும். 

தற்போது தனுஷ் செல்வராகவனின் மகன் ரிஷிகேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Most Popular

Recent Comments