’96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் உடன் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ’96’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் வெளியான காதல் காவியங்களில் 96 படத்திற்கு மிக முக்கியமான இடமுண்டு. படத்தைப் பார்த்த பெரும்பாலானோருக்கு தங்கள் பள்ளிப் பருவம் நினைவில் வந்தது. மக்கள் தங்கள் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்த்ததே அந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. அதையடுத்து ராம்குமார் தெலுங்கில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடிப்பில் 96 படத்தை ரீமேக் செய்தார்

இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இடையே இருப்பதாக கூறப்படுகிறது. பிரேம்குமார் இயக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்தப் படங்களில் நடித்து முடித்ததும் ராம்குமார் உடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.