நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் தாப்ஸி நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படத்தின் முதல்பார்வை வியாழக்கிழமை வெளியானது..
இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி நடித்துள்ள திரைப்படம் அனபெல் சேதுபதி. நடிகை தாப்ஸி கதாநாயகியாக நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
நடிகர்கள் யோகிபாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை வியாழக்கிழமை வெளியானது.
மேலும் டிஸ்னிப்ளஸ் ஒடிடி தளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.