பிரபல நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது வரை ஓய்ந்தபாடில்லை. முதல் அலை, இரண்டாம் அலை என பாதிப்பு மென்மேலும் அதிகரித்து மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. கொரோனா முதல் அலையின் போது ஒரு பகுதிக்கு ஒருவர் என்பது போல பாதிப்புகள் பதிவானது. ஆனால் இரண்டாம் அலையில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி பாதிப்புகள் ஏற்பட்டது. சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழக்கவும் நேர்ந்தது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2021/08/Zg689cqM.jpg)
இரண்டாம் அலை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் தமிழகத்திற்கு மட்டுமே நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்பும் 50-க்கும் குறைவாக பதிவாகிறது. இந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. என்னுடன் கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். கூடிய விரைவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.