V4UMEDIA
HomeNewsKollywoodதான் நடிக்கும் படத்தின் டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்யின் மகன் !

தான் நடிக்கும் படத்தின் டப்பிங்கை தொடங்கிய அருண் விஜய்யின் மகன் !

சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில் அறிமுகமாகும், அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் தனது டப்பிங்கை தொடங்கினார் !

கலையுலகில் மூன்று தலைமுறையாக ஒரு குடும்பம் நடிப்பில், பாரம்பரியமாக ஜொலிப்பது, மிகப்பெரும் சாதனை. நடிகர் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் இப்போது அவர்களது, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறையில் ஆர்ணவ் விஜய் வரை நடிப்பு அக்குடும்பத்தில் மரபாக, அழகாக வளர்க்கப்படுகிறது. 2D Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் படத்தில், தாத்தா-தந்தை-மகன் மூவரும் திரையில் இணைந்து நடிக்கும் செய்தி, ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஆர்ணவ் விஜய் இன்று தனது காட்சிகளுக்கான, டப்பிங் பணிகளை செய்யத் தொடங்கினார். இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் வேலைகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இயக்குநர் சரவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், குழந்தைகளை மையப்படுத்தி, 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. மொத்த படக்குழுவும் இப்படம் உலக ரசிகர்கள் ரசிக்கும் படியான படமாகவும், மன அழுத்தத்தை நீக்கும், பொழுதுபோக்கு திரைப்படமாகவும் இருக்குமென உறுதியாக நம்புகிறது. இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் ஊட்டியை சுற்றிய பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மேகா (எடிட்டிங்), மைக்கேல் (தயாரிப்பு வடிவமைப்பாளர்), வினோதினி பாண்டியன் (உடைகள்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

Most Popular

Recent Comments