புதிய படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இசையமைப்பாளராக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி தற்போது தேர்ந்த நடிகராகவும் தன்னைத்தானே மெருகேற்றி வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுக்கிறார். தற்போது தமிழ் சினிமாவின் பன்முகத்திறமை கொண்ட நடிகர்களில் விஜய் ஆண்டனி முக்கிய இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி ‘கோலிசோடா’ படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .தற்போது அந்தப் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்தப் படம் பல ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படமாக உருவாக இருப்பதாகவும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல முக்கிய நடிகர்கள் அந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கிடையில் விஜய் ஆண்டனி தற்போது அக்னிச் சிறகுகள், தமிழரசன், காக்கி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.