அட்லீ ஷாருக் கான் கூட்டணியில் நயன்தாரா இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான அத்தனை படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

சில மாதங்களுக்கு முன்பு அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை சந்தித்த செய்திகள் வெளியாகின. அதுவும் உண்மையாகிவிட்டது. அட்லீ ஷாருக்கானை வைத்து புதிய படம் இயக்குவதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மேலும் நயன்தாரா அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.