விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. யோகிபாபு, ராதிகா, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர்.

இந்தப் படம் கடந்த ஆண்டே துவங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்தப் படம் குறித்த அப்டேட் ஏதும் வெளியாகாமல் இருந்து வருகின்றது.
இந்த கொரோனா நேரத்தில் பல படங்கள் ஓடிடி-யை நோக்கி படையெடுத்து வருகின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இரண்டிற்கும் மேற்பட்ட படங்கள் ஓடிடி-யில் வெளியாக உள்ளன. இந்நிலையில் டாப்ஸி உடன் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தப் படமும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகத எதிர்பார்க்கப்படுகிறது . ஹாட்ஸ்டாரில் இந்தப் படம் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.